நிரந்தர வேலை கிடைக்க என்ன செய்யவேண்டும் ?

logo

வேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் அவருக்குக் கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிப்பது. அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத் தீர்மானிப்பது அவர்கள் செய்யும் வேலையை பார்த்துதான். எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை கிடைக்குமா, நிரந்தர வேலை கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வியாக அமைகிறது.

 

ஜாதகத்தில் பத்தாம் இடம் தொழிலைக் குறிக்கும் இடம். லக்னத்துக்கு பத்தாம் இடத்துக்குரிய கிரகம் வலுப்பெற்று குரு பகவான் பார்வை பெற வேண்டும் பதவிகளை வகிப்பவர்களின் ஜாதகத்தில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் வலுவாக இருப்பார்கள். .  ஒருவரின் ஜாதகத்தில் பத்தில் சூரியன் இருந்தால் அரசு உத்யோகத்தில் இருப்பார். சூரியன் ஏதோ சுமாரான பலத்தோடு இருக்கிறார் என்றால் கொஞ்ச நாளில் தனியார் நிறுவனத்திற்கு மாறுவார்.

 

அதிபலத்தோடு இருக்கிறது என்றால் அரசின் உயர்ந்த பதவிகளை அனுபவித்து விட்டுத்தான் ஓய்வு பெறுவார். சந்திரன் பத்தில் என்றால், டெக்ஸ்டைல் பிசினஸ், என்ஜினீயர், இன்டீரியர் என்று வேலை மாறும். செவ்வாய் பத்தில் என்றால் காவல்துறை, தீயணைப்புத் துறை, உளவுத் துறை என்று பல்வேறு துறைகளில் அமர்வார். அதுவே புதன் என்றால் பத்திரிகையாளர், ஜோதிடர், ஆரம்பக் கல்வி போதிக்கும் ஆசிரியர் என்று பல வேலையை வாங்கித் தருவார்.

 

மேற்கண்டவாறு ஜாதகம் அமையப் பெற்ற விவரத்தை நல்ல குருசுகரனில்  உள்ள  ஜோதிடரிம் காட்டி அறிந்து கொள்ளலாம்.

For more details :  https://goo.gl/VPxNqS

கல்வியில் சிறக்க வேண்டுமா?

logo

கல்வியில் குறைபாடு இருக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தை பார்த்தால் புதன், சந்திரன், குரு இம்மூவரும் பலவீனமாக இருப்பார்கள்.  இந்த குறைபாடு நீங்க வேண்டும் எனில், புதன் கிழமை புதன் பகவானையும் , வியாழன் கிழமை குரு பகவானையும் வணங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். கல்விக்கான கடவுள் சரஸ்வதி ஆவாள். சரஸ்வதி ஸ்லோகத்தை படிப்பதற்கு முன் உச்சரித்து விட்டு பின்பு படிக்க துவங்கினால் நன்றாக படிப்பு வரும்.

 

சரஸ்வதி சுலோகம்  :

சரஸ்வதி  நமஸ்துபியம்

வராதே  காமரூபிணி

வித்யாரம்பம்  கரிஷ்யாமி

சிட்திர் பவதுமே  சதா

 

சில குழந்தைகள் படித்து கொண்டே இருப்பார்கள் , எவ்வளவு நேரம் படித்தாலும் மறந்து விடுவார்கள், அல்லது தேர்வில் மறந்து விடுவார்கள். இந்த குறைபாடுகள் நீங்க வேண்டும் எனில் தினமும் ஹயக்ரீவ சுலோகம் உச்சரிக்க வேண்டும்.

 

ஶ்ரீ ஹயக்ரீவ சுலோகம் :

ஞானானந்தமயம் தேவம் நிர்மலம்  ஸ்படிகாக்ருதம்

ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே”

 

இம்மாதிரி படிப்பில் குறைபாடு உள்ளவர்கள் என்றால் புதன் கிழமையும் வியாழன் கிழமையும் கோவில் சென்று விளக்கு போட்டு வந்தால் இவை எல்லாம் நீங்கும், படிப்பில் கவனம் ஏற்படும்.

மேலும் மூன்றாம்பிறையை தவறாமல் பார்த்து வந்தால், கல்வியில் ஏற்றம் வரும். பின் வியாழன் கிழமை தோறும் தட்ஷனமூர்த்திக்கு கொண்டை கடலையுடன் நெய்வேத்தியம் செய்தால் நல்ல ஏற்றம் பெறலாம் .

இங்கு சொல்லப்பட்ட யாவும் பொதுவான பரிகாரங்களே.. உங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து , அதற்கான பரிகாரங்கள் பெற இந்த  லிங்க்கை கிளிக் செய்யவும் https://goo.gl/sl5r4v

 

 

 

 

ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?

logo

ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?  உங்கள் கேள்விக்கான பதில் இங்கே …  ‘ஆன்மீக ஆசான்’ எழுத்து சித்தர் பாலகுமரன் அவர்கள் கூறுவது இதோ உங்கள் முன்னிலையில் ..

ஜோதிடத்தை மட்டுமே நம்பிய காலம் உண்டு,எனினும் ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?  என்ற கேள்வி இங்கே எழுந்ததிற்கான காரணம்  ஜோதிடம் என்கிற விஷயத்தை இங்கு பலர் தவறாக பயன்படுத்துவதால் மட்டுமே. பல விஷயங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்,கெட்டு போகாத விஷயங்கள் உலகத்தில் ஏதும் இல்லை . அவ்வாறு  சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஜோதிடம் தவறானது  அல்ல,மிக சரியானது,மிக  தெளிவானது .

ஜோதிடமும் ஒரு வழியான நம்பிக்கையே. “ஜோதிடம் பொய்,அதை எவ்வாறு நம்புகிறீர்கள்? ”என்று கேட்கிறவன் எவ்வற்றையும்  நம்பாதவன்,தன்னையும்  நம்பாதவன் . ” நான் எடுத்த காரியம் அத்தனையும் தோல்வியையே தழுவும்,நான் தோல்விக்கே பிறந்தேன்,நான் வாழக்கையில் உறுபடுவதில்லை “என்று தன் தலையில் தானே அழுத்தி  கொள்கிறவனுக்கு ஜோதிடம்,கடவுள்,உழைப்பு,உயர்வு,உற்சாகம் அனைத்துமே அவநம்பிக்கையை தரும் .

ஒருவன் வெற்றியை தழுவ காரணமாய் இருப்பவை எவை, அவனது கடின உழைப்பே, அவ்வாறு கடினமாய் உழைப்பதற்கு காரணமாய் இருப்பது அவன் மனதின் உற்சாகமே. மனதின் உற்சாகத்தை தூண்டுவது ஒரு விதமான நம்பிக்கையே. அப்படி பட்ட நம்பிக்கையை தர கூடியது ஜோதிடம் .

கண்ணனுக்கு புலப்படாத காற்றை நம்புவாய் எனில் ஜோதிடத்தை நம்புவாய் . சிற்பி செதுக்கிய சிலையில் இறைவனை காணும் வழியே ஜோதிடமும் ஆகும்.

Click here to know more details : https://goo.gl/sl5r4v

கடன் சுமை தீர என்ன செய்ய வேண்டும் ?

logo

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போது ‘ஜெனனி ஜென்ம, சௌக்யானாம்’ என்ற செய்யுளை எழுதுவார்கள். இதில் ‘பதவி பூர்வ புண்ணியானாம்’ என்ற சொற்றொடர் வரும். அதாவது அவரவர் பிராப்தப்படி எதற்காக இந்த பிறவி எடுத்து இருக்கிறோமோ, அதற்கேற்ப அவரவர் பூர்வபுண்ணியத்தை பொறுத்தே எல்லாம் அமையும் என்பதாகும். ஆகையால்தான் ஜோதிடம் பார்க்கும்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை முக்கியமாக பார்ப்பார்கள்.

 

கிரகங்களால் உண்டாகும் கடன் சுமைகள்

 

பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கைகள் காரணமாகவே கடன் சுமை உண்டாகிறது. இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினொராம் இடம் ஆகியவை பலம் பெற்று இருந்தால் கடன் சுமை வராது. வந்தாலும் பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடன் அடையும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் 6, 8, 12ம் இட கிரகங்கள் இருந்தாலும் கடன் ஏற்படும். குரு நீச்சம் அடைந்து அல்லது 6, 8, 12 ல் மறைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி, கேது சேர்க்கை உள்ள ஜாதகங்கள் கடனால் அவதிப்பட நேரிடும். பெரும்பாலும் சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, பண நஷ்டம், சொத்து இழப்பு ஏற்படுவதற்கு அந்தந்த கால கட்டங்களில் வரும் தசாபுக்திகளே காரணம்.

 

6, 8, 12ம் இட சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் கடன் தொல்லைகள் கூடும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது வீண் விரயங்கள், உடல் கோளாறுகள் மற்றும் தவறான அணுகுமுறையாலும் கடன் உண்டாகும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவு, குடும்ப செலவு, கண் சம்பந்தமான மருத்துவ செலவுகள் ஏற்படும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொந்தபந்தம், சகோதரர்களால் வீண் செலவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நிலம், வீடு, விவசாயம், தாயாரால், கல்வியினால் கடன்பட நேரிடும். ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவுகளுக்காக கடன் ஏற்படலாம்.

 

ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வழக்குகள், விபத்துகள், நண்பர்கள் மற்றும் மனைவியினால் கடன் ஏற்படும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் எதிர்பாராத செலவுகள் கடன்பட வைக்கும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் பூர்வீக சொத்துகளை விற்க நேரிடும். பத்தாம்  அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் காரணமாக கடன் சுமை கூடும்.

 

கடன் தீர யோசனை – பரிகாரம்

 

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும். மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும்.

 

அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்; அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

Click here to know more details : https://goo.gl/DBECqw

 

திருமண பொருத்தம் பார்க்க வேண்டுமா ?

logo

நம் வாழ்க்கையில் திருமணம் தான் மிக முக்கியமான திருப்புமுனை இது சரியில்லை என்றால் அனைத்தும் மத்திமம் தான்.திருமணப் பொருத்தம் பார்ப்பது கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பரஸ்பரம் ,ஆரோக்கியம்,விட்டுகொடுக்கும் தன்மை ,விசிகரம்,ஆயுள்,குழந்தை பாக்கியம் இவை அனைத்தும் நன்றாக அமைப்பு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு.

திருமணப் பொருத்தம் பார்ப்பது நட்சத்திரம் பொருத்தம் பார்ப்பது மட்டுமல்ல இது பொதுவானது .ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பொருத்தம் பார்க்க வேண்டும் .ராசி,நட்சத்திரம்,ஜாதககட்டம்,தசாபுத்தி மற்றும் தோஷங்கள் இவை அனைத்தையும் பார்க்க வேண்டும் .இது தான் திருமணப் பொருத்தம்.

நாங்கள் எங்கள் திறமையான ஜோதிடர்களை கொண்டு நல்ல முறையில் முழுமையாக ஆராய்ந்து திருமணப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கப் படும்.

Click here for more details : https://goo.gl/g9h0zg